திண்டுக்கல்: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுவதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது மனுக்களை நேரடியாக அளிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















