திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப.,அவர்களின் உத்தரவின்படி, (30.06.2026), மேரி இம்மாகுலேட் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் SJHR பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி. ரூபி அவர்களின் தலைமையில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி மோசடிகள், சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள், குட் டச் – பேட் டச் குறித்த விழிப்புணர்வு, போதைப்பொருள் தடுப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவசரநிலைகளில் பாதுகாப்பாக செயல்படும் வழிமுறைகள் குறித்து விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 100 (காவல்துறை அவசர உதவி), 1930 (இணையவழி நிதி மோசடி புகார்), 1091 (மகளிர் உதவி), 1098 (குழந்தைகள் உதவி எண்) ஆகிய அவசர உதவி எண்களை தேவையான நேரங்களில் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.




















