திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைச்சுப் பிரிவில் தொடர்ந்து 35 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய நத்தம் முருகேசன் (ஜூனியர் அசிஸ்டென்ட்) செவ்வாய்க்கிழமை (30.06.2026) பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வை முன்னிட்டு, நத்தம் முருகேசன் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள், 35 ஆண்டுகளாக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் ஆற்றிய பணியைப் பாராட்டி நினைவுப் பரிசாக கேடயத்தை (Shield) வழங்கி, பணி ஓய்வு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் காவல் துறை அலுவலர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டு, நத்தம் முருகேசனின் பணிச் சேவையைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















