திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தும் நோக்கில், மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர் தீவிர நடை ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை (30.06.2026) மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்கள் இணைந்து தீவிர நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த ரோந்துப் பணியின் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




















