திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர், அருள்செல்வன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிந்துபூந்துறை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனர். அவர், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ராஜா(30) என்பதும், அவர் வைத்திருந்த பையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் அடங்கிய 60 பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















