திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் காரணமாக அச்ச ராஜகப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரை கொலை செய்த வழக்கில் மாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த சட்டி குண்டன் (எ) சிரஞ்சீவி(34). முருகேசன்(35). மற்றும் சங்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன்(41). ஆகிய 03 நபர்களையும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெயக்குமார் அவரது அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். உலகநாதன் அவர்கள், நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர். லட்சுமி மற்றும் அரசு வழக்கறிஞர்.சூசை ராபர்ட் அவரது சீரிய முயற்சியால் (30.02.2026) திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி குற்றவாளிகளான சிரஞ்சீவி, முருகேசன் மற்றும் மற்றொரு முருகேசன் ஆகிய 03 நபர்களுக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.25,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















