திருப்பத்தூர்: பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர் தீவிர நடை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, (28.06.2026) மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்களிலும் போலீசார் தீவிர நடை ரோந்து மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.




















