நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சரண் என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, உறுதியான ஆதாரங்களை சேகரித்து, நீதிமன்றத்தில் சிறப்பாக முன்வைத்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளனர். இச்சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய விசாரணை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.




















