நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோனேரிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த மளிகைக் கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கடை உரிமையாளரான ஜெயமுருகன் (51). என்பவரை காவல்துறையினர் கைது செய்து, அங்கிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இராசிபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட ஜெயமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.




















