நாமக்கல்: இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டணம் சாலை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் நடை ரோந்து மேற்கொண்டனர். நடை ரோந்தின் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குற்றத் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் அவசர உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.




















