திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் முக்கூடல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சிலர் ஆம்னி காரில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அவா்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முக்கூடல், அண்ணாநகரைச் சேர்ந்த மணிகண்டன்(29). கீழஅம்பாசமுத்திரம் ஆசிரியர் காலனியை சேர்ந்த கணேசன்(35). என்பதும், 27 மூட்டைகளில் சுமார் 945 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முற்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்த பைக், ஆம்னி கார், ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















