சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சிவகங்கை மாவட்ட 16-வது ரோல்பால் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியை பள்ளி சேர்மன் எஸ்.பி குமரேசன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தார். விளையாட்டு வீரர்கள் உறுதிமொழியை திருப்பி சொல்லி உறுதி ஏற்றினர். இந்நிகழ்ச்சியில் ரோல் பால் செகரட்டரி கோவிந்தராஜன் பள்ளி துணை முதல்வர் பிரேம் சித்ரா ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















