நாமக்கல்: நாமக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரீன் பார்க் பள்ளி பின்புறம் அமைந்துள்ள அலுவலகத்தில் செயல்பட்டு வந்த நிதி நிறுவன உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (59). என்பவர், பெண்களிடம் கந்து வட்டி வசூல் செய்ததுடன், அவர்களை மிரட்டியும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் வந்ததாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படை ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















