நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளியம்மன் கோவில் தெரு பகுதியில், தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சரித்திர பதிவேடு குற்றவாளி மணி (எ) சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக இராசிபுரம் காவல் நிலைய போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப வன்முறை மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




















