
கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திரு. பத்மநாபன் அவர்கள், சுற்றுலாப் பயணிகள் தவறவிட்டிருந்த இரண்டு விலை உயர்ந்த மொபைல் போன்களை பாதுகாப்பாக மீட்டார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த மொபைல் போன்களின் உரிமையாளர்களாக கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த மொய்தீன் மற்றும் திருச்சூரைச் சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் கண்டறியப்பட்டனர். பின்னர், மீட்கப்பட்ட இரண்டு மொபைல் போன்களும் உரிமையாளர்களிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டன. காவல்துறையினரின் இந்த நேர்மையான மற்றும் பொறுப்பான செயலை பொதுமக்கள் பாராட்டினர்.



















