நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட திடீர் சோதனையில், நாமக்கல்,எருமப்பட்டி, சேந்தமங்கலம், ராசிபுரம், ஆயில் பட்டி, மங்களபுரம், திருச்செங்கோடு நகர காவல் நிலையம்,வெப்படை, பரமத்தி, நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 12 பேர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.




















