நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக அஜித்குமார் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரைவான விசாரணையில், அஜித்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.




















