கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தளி -ஓசூர் ரோடு, தளி ஏரிக்கு எதிரில் நாகம்மா கோவில் அருகே சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்ததில் அங்கு ஒரு நபர் சட்டவிரோதமாக சுமார் 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார். சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















