நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தனபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொலை வழக்கின் குற்றவாளிகள் வீரமணி (24). அஜித் குமார் (24). ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விரைவாக செயல்பட்டு, 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




















