விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, சிவகாசி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (02.07.2026) போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சிவகாசி பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் என்பவரின் மகன் உமர் முக்தார் (வயது 26). என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்ததுடன், அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.




















