விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. என். ஸ்ரீ நாதா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, (24.05.2026) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், இராஜபாளையம் தெற்கு காவல் நிலையம், இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் , ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம், ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 5 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், ஆன்லைன் லாட்டரி மற்றும் சூதாட்ட விவகாரங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.




















