கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில், குற்றவாளி திருடிய பணத்தில் தனது மனைவி பெயரில் வாங்கியிருந்த நிலத்தை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கையகப்படுத்தி மீட்டனர். இந்த வழக்கை திறம்பட விசாரித்து நடவடிக்கை மேற்கொண்ட களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் பரமேஸ்வரன், சார்பு ஆய்வாளர் மகேந்து மற்றும்சிறப்பு சார்பு ஆய்வாளர் சாம் பிரைட் ஆகியோரை, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகளை சட்டத்தின் மூலம் மீட்கும் காவல்துறையின் நடவடிக்கைக்கு இந்தப் பாராட்டு மேலும் ஊக்கமளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



















