கன்னியாகுமரி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வேலம்மாள் (65) என்ற மூதாட்டி, தவறுதலாக நாகர்கோவில் வெள்ளமடம் பகுதிக்கு வந்து, கடந்த இரண்டு நாட்களாக சிரமப்பட்டு வந்தார். இதனை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் தலைமையிலான நிமிர் குழு, மூதாட்டியிடம் விசாரணை நடத்தி, அவரது அக்கா மகன் விஜயனை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தது. பின்னர், மூதாட்டியை அவரது உறவினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். நிமிர் குழுவின் மனிதநேயமிக்க இந்தச் செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.



















