கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கலுக்கொண்ட பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்தபோது அவரிடம் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா இருந்தது. சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















