தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, அவற்றின் பராமரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில், வழக்குகளின் புலனாய்வு முன்னேற்றம், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடி, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினார்.




















