சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்ட கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த தன ஜெயன் அவர்கள், பணியிட மாற்றத்தின் அடிப்படையில் இன்று (ஜூலை 7) சென்னை மாநகர காவல்துறையின் வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையராக (Assistant Commissioner of Police) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவருக்கு காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களுக்கு திறம்பட சேவையாற்றுவார் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















