திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி, பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள BVB தனியார் பள்ளியில் (06.07.2026) மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வழிமுறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு, மேலும் சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் ஆகியவை மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் சமூகத்தில் பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டிய முறைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து காவல்துறையினர் விரிவாக விளக்கினர். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















