திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் அருகே மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது போலீசை கண்டதும் வாகனம் சர்வீஸ் சாலையில் வேகமாக சென்றது இதனைப் பார்த்த போலீசார் போலீஸ் ஜிப்பில் வேகமாக சென்று மடக்கி காரை சோதனை செய்த போது காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது பின்னர் தீவிரமாக விசாரித்தபோது ஆந்திராவில் இருந்து குட்கா காரில் கொண்டுவரப்பட்டு மீஞ்சூர், மணலி புதுநகர், நாபாளையம் மாதவரம், செங்குன்றம் ,உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
பின்னர் தீவிர விசாரணை செய்வதில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (33).இவரது உறவினரான செங்கல்பட்டு பகுதி சேர்ந்த தூசி முத்து (60). என்பது தெரிய வந்தது இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 60 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் இது குறித்து மணலி புது நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர் கைது செய்த ரமேஷ் என்பவர் தொடர்ந்து மூன்று முறை குட்கா விற்பனை செய்து சிறையில் சென்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. மில்டன்



















