திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவல் படி பொன்னேரி ஆய்வாளர் தமிழன்பன் மற்றும் போலீசார் பொன்னேரி திருவொற்றியூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட. குட்கா பாக்கெட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது தீவிர விசாரணை செய்ததில் பொன்னேரி ஜீவா தெரு பகுதியை சேர்ந்த மணிமாறன் (22). பொன்னேரி பள்ளம் பகுதியைச் சேர்ந்த பிரதோஷ (19). பொன்னேரி அடுத்த பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (58). என்பது தெரிய வந்தது பின்னர் 3 பேரையும் கைது செய்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.




















