திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்காக, இ-சாட்சியம் (e-Sakshya) மற்றும் இ-சம்மன் (e-Summons) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் கலந்து கொண்டு, புதிய மின்னணு குற்றவியல் நீதி நடைமுறைகளை திறம்பட செயல்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கமளித்தார். மேலும், இ-சாட்சியம் மற்றும் இ-சம்மன் செயலிகளை துல்லியமாகவும், காலதாமதமின்றியும் பயன்படுத்துவதன் மூலம் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் விரைவுபடுத்த முடியும் என அறிவுறுத்தினார்.
பயிற்சியின்போது, மின்னணு ஆதாரங்களை பதிவு செய்தல், பராமரித்தல், சமர்ப்பித்தல் மற்றும் மின்னணு முறையில் சம்மன்களை அனுப்பும் நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, செயல்முறை விளக்கங்களின் மூலம் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களை பெற்றனர். இந்தப் பயிற்சி, காவல்துறையின் டிஜிட்டல் சேவைகளை வலுப்படுத்துவதோடு, நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் முக்கியமான முயற்சியாக அமைந்தது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















