மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 23.5 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில், மதுரை முதலாம் கூடுதல் போதைப்பொருள் தடுப்பு (NDPS) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முத்துராஜா (24). மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதேஸ்லிமா (42). ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்ட மாசாணம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் ரகசியமாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















