மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று இரவு பொன்னமங்கலம் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்மாய்க்குள் செல்போன் வெளிச்சம் தெரிந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் செல்போன் வெளிச்சம் வந்த இடத்திற்கு சென்றபோது அங்கே பத்துக்கும் மேற்பட்டோர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். இதில் ஏழு பேர் தப்பி ஓடிய நிலையில் 11 பேரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது , இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த ரொக்க பணம் ரூபாய் 4,21,000, இருசக்கர வாகனங்கள் 10 , 4 பட்டன் போன் மற்றும் 11 டச் போன் உட்பட 15 போன்களையும் சீட்டாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டு, டீ குடிப்பதற்காக வைத்திருந்த பிளாஸ்க் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















