மதுரை: மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் டி.வி.எஸ். மோட்டார் சைக்கிள் ஷோரூமில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து தல்லாகுளம், அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தின. இந்த சம்பவத்தில் விற்பனைக்காக நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமின்றி தப்பின. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















