திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் அதிகாலையில் காப்பர் பொருட்களை உருக்கும் பர்னஸ் கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்துள்ளது. அப்போது பணியில் இருந்த பிகாரை சேர்ந்த ரவி ரஞ்சன்(26) என்ற தொழிலாளர் உடல் சிதறி உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த வட மாநிலத்தை சேரந்த 7 பேர் இரும்பு குழம்பு சிதறி படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று பர்னஸ் கொதிகலன் வெடித்து தீப்பிழம்பு ஏற்பட்டதை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்த 7 வட மாநில தொழிலார்கள் மீட்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனை, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனை, தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் பாகங்கள் சிதறி உயிரிழந்த ரவி ரஞ்சனின் உடலை மீட்டு கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















