கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், உயிரிழந்த கைதியின் தாயாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமையை விளக்கினார். பின்னர், குடும்பத்தினரை மகனின் உடலை பார்வையிட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.




















