கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை மதுசூதனபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆதரவின்றி சாலையோரத்தில் பரிதாபமாக வாழ்ந்து வந்த மயிலாடி ஊரைச் சேர்ந்த முதியவர் ஆறுமுகத்தை அகில இந்திய மக்கள் நலக் கழகம் நிர்வாகி சேக் பாஸில் அவர்கள் சமூக அக்கறையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நிமிர் குழுவிடம் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த நிமிர் குழு விரைந்து வந்து
அந்த முதியவரின் நிலையை கண்டறிந்து நிமிர் குழுவினர், “நாம் ஒருவர் அறக்கட்டளையின் உதவியோடு.உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். கூட்டுமுயற்சியின் மூலம் முதியவரை மீட்டு, அவருக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சமூகத்தில் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் முதியவர்களை கண்டும் காணாமல் செல்லாமல், அவர்களுக்கு கரம் நீட்டி மனிதநேயத்துடன் உதவுவது அனைவரின் பொறுப்பாகும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. “ஒரு மனிதனை காப்பாற்றுவது, ஒரு உயிருக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதற்கு சமம்” என்பதை செயலால் நிரூபித்த நிமிர் குழுவினர், நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் இந்த மனிதநேய சேவைக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக அக்கறையுடன் இணைந்து செயல்பட்ட அனைத்து தன்னார்வலர்களுக்கும் பொதுமக்கள் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.




















