திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (11.07.2026) அன்று கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வந்த வாகனத் தணிக்கை நடவடிக்கைகள், சோதனை நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறித்து விரிவாக ஆய்வு செய்ததுடன் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுடன் கலந்துரையாடி, தணிக்கைப் பணிகளை மேலும் திறம்பட செய்யவும்,
சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்துவதோடு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















