திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே கேசவசமுத்திரம் பகுதியில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் துரை தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை சோதனையிட்டதில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 320 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காருடன் 320 கிலோ ரேஷன் அரிசியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அரிசியை கடத்திச் சென்ற கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த செல்லத்துரை (24). என்பவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















