திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் இ 3 காவல் நிலையம் சார்பாக ஆவடி காவல் ஆணையரகம் அறிவுறுத்தலின் பேரில் செங்குன்றம் உதவி ஆணையர் பிராங்க் டி ரூபன் தொடங்கி வைத்து மாணவர்களிடம் போதை விழிப்புணர்வு பற்றி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் இ 3 மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஜெயின் காலேஜ் மாணவ மாணவியர் பங்கேற்று போதை விழிப்புணர்வு பற்றிய பதாகைகளை ஏந்தி மீஞ்சூர் நகரம் முழுவதும் ஊர்வலமாக வந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு



















