திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினருக்கான CCTNS 2.0 (Crime and Criminal Tracking Network and Systems) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 6 நாட்கள் நடைபெற்றன.
குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தகவல்களைப் பதிவு செய்தல், சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் காவல்துறை பயன்பாட்டிற்கான ஒருங்கிணைந்த கணினி அமைப்பை திறம்பட கையாளுதல் உட்பட விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் 23 காவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த காவலர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















