சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், கடந்த (26.05.2026) முதல் (30.06.2026) வரை, தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த 932 வழக்குகளில் 562 வழக்குகளின் விசாரணையை விரைவாக முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்து, வழக்குகள் விரைவாக நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு சிறப்பாக செயல்பட்ட தலைமைச்செயலக குடியிருப்பு காவல் குழுவினரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















