கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ்., அவர்களின் மனிதநேய வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் நிமிர் குழுவினர், ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த முதியவரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்த்தனர். தக்கலை பகுதியில் இருந்து கிடைத்த தகவலின் பேரில், தக்கலை பேருந்து நிலையத்தில் நடக்க முடியாத நிலையில் சுமார் (65). வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலை ஓரத்தில் இருப்பதை நிமிர் குழுவினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து, நாம் ஒருவர் அறக்கட்டளை நிர்வாகிகளை தொடர்புகொண்டு, அவர்களின் உதவியுடன் அந்த முதியவரை பாதுகாப்பாக மீட்டு, தோவாளை பொற்றையடியில் உள்ள அன்னை ஆசிரமத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். மனிதநேய அடிப்படையில் விரைந்து செயல்பட்ட நிமிர் குழுவினரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.



















