தென்காசி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு இ.கா.ப., அவர்கள் (07.07.2026)ம் தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் சரகத்தில் தென் மேற்கு பருவக்காலத்தில் குற்றால அருவிகளில் குளிக்க தமிழகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகையை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் அருவிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்ப பணிகள், போக்குவரத்து மாற்றங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அருவிகளில் குளிக்க வந்திருந்த பயணிகளிடம் கருத்துகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் குளிக்க வரும் பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் ஏற்பாடுகள் செய்ய அறிவுரை வழங்கினார்.




















