தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பரும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ண பெருமாள் (29). ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தில் இருந்த இவருக்குச் சொந்தமான இடத்தை கல்லிடைக்குறிச்சி, மூலச்சி வடக்குத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (42). என்பவருக்குக் விலைக்கு விற்பதாக கூறி பணம் பெற்றார்.
ஆனால், இடத்தைப் பதிவு செய்வதற்கு பலமுறை அழைத்தும் கண்ணபெருமாள் வராமல் அலைக்கழித்துள்ளார். இதனால ஆத்திரமடைந்த செந்தில்குமார், பள்ளக்கால் பொது குடி, மெய்காத்தான் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் (25). அதே பகுதியைச் சேர்ந்த சரண் (26). ஆகிய இருவருடன் பரும்பு கிராமத்திற்குச் சென்று கண்ண பெருமாளிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறி அவரை காரில் கடத்திச் சென்றனர்.
இது குறித்து, ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு
செந்தில்குமார் இருக்கும் இடம் அறிந்து அங்கு சென்று கண்ண பெருமாளை மீட்டு செந்தில்குமார், அருணாச்சலம், சரண் ஆகிய மூவருரையும் கைது செய்ததோடு கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















