தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (20). இவர் கடந்த 9 ஆம் தேதி திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே ஒருவழிப்பாதையில் வந்த சுமை வாகனம் அவா் மீது மோதியதில் கார்த்திகேயனின் கால் விரல் துண்டானது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிந்து சுமை வாகன ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த ஜெகன்(51). என்பவரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















