திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் (29.05.2026) அன்று, கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய செயலில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், நெட்டூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்ற ராஜா (30), திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த நந்து (24). ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் மானூர் காவல் ஆய்வாளர், பால கிருஷ்ணன், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், இருவரும் குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் (15.07.2026) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















