திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் இணைந்து, (14.07.2026) அன்று சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மனநல மேம்பாட்டுப் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுடனும் நேரடியாக கலந்துரையாடினார். அப்போது, மனநலம், தன்னம்பிக்கை, இணைய பாதுகாப்பு, போதை பொருட்களால் ஏற்படும் நன்மை, தீமைகள், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவர்கள் ஜாதி, மதம் உள்ளிட்ட எந்தவித பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமல், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ வேண்டும் எனவும் கல்வி மற்றும் விளையாட்டில் முழு கவனம் செலுத்தி, தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அறிவுரை வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















