திண்டுக்கல்: திண்டுக்கல், அருகே கடந்த 2022-ம் ஆண்டு அடிதடி வழக்கில் கல்நூத்தாம்பட்டி சேர்ந்த மணிகண்டன் என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனைத் தொடர்ந்து நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இது தொடர்பாக புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ், காவலர் ஜெரால்டுராஜ் தீவிர விசாரணை மேற்கொண்டு செம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.




















