திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள பிஸ்கட் கம்பெனியில் மர்ம நபர்கள் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பிளேட்களை திருடியதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சத்யா தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வெற்றிவேல், ரகு, நவீன்குமார் மற்றும் (18). வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரும்பு பிளேட்டுகள், டாட்டா ஏஸ் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















