தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த அபிஷேக் (20). என்பவரை கைது செய்தனர். சோதனையின்போது, அவரிடமிருந்து சுமார் 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர் மீது போதைப்பொருள் மற்றும் மனோவிகார மருந்துகள் தடுப்புச் சட்டம் (NDPS Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















